ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் ரஜினியுடன் தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், மிர்ணா, வஸந்த் ரவி, மாரிமுத்து, யோகிபாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு திரையுலகை சேர்ந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், இதே ஜெயிலர் என்கிற பெயரில் மலையாளத்தில், அதே ஆகஸ்ட் 10ம் தேதி ஒரு படம் வெளியாகிறது. , தமிழ் ஜெயிலர் படக்குழுவிடம் படத்தின் தலைப்பை மாற்றி கேரளாவில் ரிலீஸ் செய்யும்படி மலையாள ஜெயிலர் டீம் வேண்டுகோள் வைத்தது.
ஆனால் இதனை தமிழ் ஜெயிலர் படக்குழு ஏற்கவில்லை. இந்த விவகாரத்தால் அதிர்ச்சியான நடிகர் ரஜினி, மலையாள குழுவினருடன், மோகன்லாலை பேசச் சொல்லியிருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.