Friday, April 12, 2024

அரை மணி நேரத்தில் உருவான ‘அண்ணாமலை’ படப் பாடல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1992-ம் ஆண்டில் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த அண்ணாமலை படத்தில் இடம் பெற்ற ‘ரெக்கை கட்டிப் பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்’ பாடலுக்கான இசை அரை மணி நேரத்திற்குள் நடந்து முடிந்ததாகச் சொல்கிறார் இசையமைப்பாளர் தேவா.

இது பற்றி பேட்டியொன்றில் குறிப்பிட்ட இசையமைப்பாளர் தேவா, ‘அண்ணாமலை’ படத்தின் தயாரிப்பு நடந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் மாலையில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் எனக்கு போன் செய்தார். “தேவா.. அர்ஜண்ட்டா எனக்கு இன்னொரு பாட்டு வேணும். ரஜினியோட கால்ஷீட் 3 நாள் கைல இருக்கு. குஷ்பூவோட கால்ஷீட்டும் கிடைச்சிருக்கு. அதுனால கிடைச்ச கால்ஷீட்ல ஒரு பாட்டை ஷூட் பண்ணலாம்ன்னு பார்க்குறேன். அந்தப் பாட்டு நாளைக்குக் காலைல எனக்கு வேணும். நாளைக்கு ராத்திரி ஷூட்டிங் துவங்குது…” என்றார் கே.பாலசந்தர்.

எனக்குத் திக்குன்னு ஆயிருச்சு. “நைட்டுக்குள்ள எப்படி ஸார் பாட்டு ரெடி பண்றது..? அதோட இதுதான் ரஜினி ஸாரோட என்னோட முதல் படம். பாட்டு நல்லாயிருந்தால்தான் எனக்கு படங்கள் வரும். கொஞ்சம் நேரம் கொடுத்தால்தானே நல்லதா கொடுக்க முடியும்..?” என்று கேட்டேன். “அதெல்லாம் உன்னால முடியும் தேவா.. செஞ்சு கொடு..” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

வேற வழியில்லாமல் அன்னிக்கு ராத்திரி 7 மணிக்கே எல்லா ஆர்க்கெஸ்ட்ராவையும் வரவழைச்சுட்டேன். கிட்டத்தட்ட 36 பேர் வந்திருந்தாங்க. அனந்து ஸாரும், நடராஜன் ஸாரும் வந்துட்டாங்க. வைரமுத்துவும் பாட்டெழுத வந்துட்டாரு.

எல்லாரும் அசெம்பிள் ஆனப்புறம் நான் இசைக்க ஆரம்பித்தேன். முதலில் வந்த இசையே இந்தப் மெட்டுதான். வைரமுத்து மளமளவென எழுதிக் கொடுத்திட்டார். 7 மணிக்கு ஆரம்பித்த இசையமைப்பு 7.30 மணிக்கெல்லாம் முடிஞ்சிருச்சு.

அதுக்கப்புறம் ஆர்க்கெஸ்ட்ராவுக்கு நோட்ஸ் எல்லாம் கொடுத்திட்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ராவை நைட்டோட நைட்டா வரவழைச்சு பாட வைச்சு.. அதிகாலைல 3 மணிக்கு நடராஜன் ஸார் கைல டேப்பைக் கொடுத்துட்டேன்.

இந்த அளவுக்கு ஸ்பீடா ஒர்க் செஞ்சது எனக்குக் கிடைத்த ஒரு புதிய அனுபவம்..” என்றார் இசையமைப்பாளர் தேவா.

- Advertisement -

Read more

Local News