பாரதிராஜா இயக்கத்தில் வெளியான, வேதம் புதிது படத்தில், நாயகி அமலாவின் மாமியாராக சரிதா நடித்திருப்பார். காதுகளில் நீண்ட தண்டட்டி அணிந்து வெற்றிலை பாக்கு எல்லாம் போட்டுக் கொண்டு முதிய பெண்மணியாக தோன்றுவார்.
இது குறித்து சரிதா, “எனக்கு ரொம்ப ஓல்ட் லுக் என முதலில் டைரக்டர் பாரதிராஜா சொல்லவில்லை. தவிர, ஹீரோயின் வேடத்துக்கு 15 வயது பெண்ணை தேடிக்கொண்டு இருக்கிறேன் என்றார் அவர். ஆனால் ஸ்பாட்டில் அமலா இருந்தார்.. அவருக்கா நான் மாமியார் என அதிர்ந்துவிட்டேன். தவிர என் கெட்அப்பையும் ரொம்ப ஓல்ட் ஆக காண்பித்துவிட்டார் பாரதிராஜா. ஆனாலும் நடித்துக்கொடுத்தேன். அதே நேரம் சம்பள செக்-ஐ வாங்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.