Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

வைரலாகும் எமி ஜாக்சனின் புதிய தோற்றம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் இத்தாலியின் மிலன் நகரில் ‘மிலன் ஃபேஷன் வீக்’ என்ற நிகழ்வு நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு திரை பிரபலங்கள், மாடல்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு மிலன் ஃபேஷன் வீக் நிகழ்வில் நடிகை எமி ஜாக்சன் தனது காதலர் எட் வெஸ்ட்விக்குடன் கலந்து கொண்டுள்ளார். இதில் எமி ஜாக்சனின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்த புகைப்படங்களை பகிர்ந்த நெட்டிசன்கள் எமி ஜாக்சனின் தோற்றம் ‘ஒப்பன்ஹெய்மர்’ படத்தில் வரும் சிலியன் மர்ஃபியின் தோற்றத்தை ஒத்திருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை எமி ஜாக்சன், ‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ஷங்கரின் ‘ஐ’, ‘தங்கமகன்’, ‘தாண்டவம்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘2.0’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள அவர், தற்போது அருண் விஜய் நடிக்கும் ‘மிஷன் அத்தியாயம் 1’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்து வந்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. 2019-ல் எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. ஜார்ஜை திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இப்போது பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை, எமி ஜாக்சன் காதலித்து வருகிறார். இருவரும் இணைந்து சமீபத்தில் லண்டன் அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பங்களா வாங்கியுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News