Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

மீண்டும் நடிக்க வந்த எமி ஜாக்சன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் மதராச பட்டணம், ஐ, தங்கமகன், கெத்து, 2.0, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த எமி ஜாக்சன் தற்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.

இதுகுறித்து எமி ஜாக்சன் அளித்துள்ள பேட்டியில், “நான்கு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கப்போகிறேன். இது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னொரு புறம் என்னால் இயன்றவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்காக பணியாற்றுகிறேன். இவர்களுக்காக சென்னையைச் சேர்ந்த ஒரு சேவை அமைப்போடு இணைந்து பணி செய்கிறேன்.

சிறுவயது முதலே பிள்ளைகளை ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் வளர்க்க முடிந்தால் பெரியவர்களான பிறகு பெண்களை ஆண்கள் கவுரவிப்பார்கள். என் மகனோடு இப்போதில் இருந்தே இதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். தற்போது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மார்ஷல் ஆர்ட்ஸ், குதிரை சவாரி ரேசிங் போன்றவற்றை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

என்னை நான் நிரூபித்துக்கொள்வதற்கு வந்த இந்த வாய்ப்பை உபயோகித்துக்கொண்டிருக்கிறேன். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் எல்லா பெண்களுமே சூப்பர்வுமனாக மாறிவிடலாம் என்பது என் கருத்து” என்றார்.

- Advertisement -

Read more

Local News