‘நேரம்’ படத்தை இயக்கி, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். தொடர்ந்து அவர் இயக்கிய பிரேமம் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாராவை வைத்து இவர் இயக்கி ‘கோல்ட்’ படமும் ஹிட்.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். இவரிடம், ‘அஜித்தை வைத்து ஒரு படம் இயக்குங்கள்’ என கேட்டார் ரசிகர் ஒருவர்.
அதற்கு அவர் “நான் இயக்கிய பிரேமம் படத்தை அஜித் மிகவும் ரசித்ததாக, நிவின் தெரிவித்தார். குறிப்பாக அந்த படத்தில் வரும் காலேஜ் இண்ட்ரோ மற்றும் களிப்பு பாடல் அவருக்கு பிடித்திருப்பதாக கூறினார்.
பிறகு அஜித்தின் மேனேஜரை பத்து முறையாவது தொடர்பு கொண்டு, அஜித்தை சந்திக்க வேண்டும் என கூறி இருப்பேன். ஆனால் எட்டு வருடங்களாக அஜித்திடம் இருந்து பதில் இல்லை.
எனக்கு வயதாவதற்குள் அஜித் சாரை பார்த்தால் என் படத்தில் நடிக்கும்படி கேட்பேன்” என ஆதங்கத்துடன் பதில் அளித்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.