Thursday, November 21, 2024

நடிகர் சூர்யா தயாரிக்கும் நான்கு படங்களும் ஓடிடியில் வெளியாகின்றன

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2-டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் 4 படங்களும் நேரடியாக அமேசான் பிரேம் வீடியோ என்னும் ஓடிடி தளத்தில்தான் வெளியாகவுள்ளன.

இது தொடர்பாக 2-டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அமேசான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

நேரடியாக அமேசன் பிரைம் வீடியோவில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ‘ஜெய் பீம்’,  ‘உடன்பிறப்பே’,  ‘ஓ மை டாக்’ மற்றும் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ ஆகிய படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்தத் திரைப்படங்களில் தமிழ் திரை உலகின் திறமையான நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இதில் ஜெய் பீம்’ படத்தில் பிரகாஷ்ராஜ், ரமேஷ் ராவ், லிஜாமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் மணி கண்டன் ஆகியோருடன் சூர்யாவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

‘உடன் பிறப்பே’ என்ற படத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் மற்றும் சித்து ஆகியோர் நடிப்பில் குடும்ப ஃபேமிலி டிராமாவாக தயாராகியுள்ளது.

‘ஓ மை டாக்’ படத்தில் அருண் விஜய், அர்ணவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார் மற்றும் வினை ராய் ஆகியோரின் நடிப்பில் குழந்தைகளை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது.

ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் நையாண்டி, நகைச்சுவையை மையப்படுத்தி ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ படம் உருவாகியுள்ளது.

2-டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ‘சூரரை போற்று’ மற்றும் ‘பொன்மகள் வந்தாள்’ ஆகிய படங்கள் இதே அமேஸான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில்தான் வெளியாகின. அப்போது இந்தப் படங்களுக்கு உலகளவில் பார்வையாளர்களிடமிருந்து எதிர்பார்க்காத அளவில் ஆதரவு கிடைத்துள்ளது.

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரான சூர்யா இது குறித்துப் பேசுகையில், “கடந்த ஆண்டு பெரும் மாற்றமாக அமைந்தது. எங்களுக்கு முன்னோடிகள் யாரும் இல்லாத சூழ்நிலையில், திரைப்பட வெளியீட்டில் பல்வேறு புதுமைகளை நாங்கள் மேற்கொண்டோம்.

2டி நிறுவனத்தின் அண்மைய திரைப்பட வெளியீடுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ட்ரீமிங் சேவையாக அமேசான் இருக்கிறது. பொன்மகள் வந்தாள்’ முதல் ‘சூரரைப் போற்று’வரை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பார்வையாளர்களை சென்றடைந்தது.

இதற்கு காரணமான அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்துடன் தொடர்ந்து தொழில் ரீதியான ஒத்துழைப்பை நீட்டிப்பதில் நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News