Friday, September 20, 2024

ஆசைப்பட்ட விசயத்தை விட்டு விலகிய அஜித்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித் குமார் தன்னுடைய அம்மாவின் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் அஜித். அந்த அறக்கட்டளையின் மூலம் அவர் வசித்து இருக்கும் திருவான்மியூர் பகுதிகளில் மரம் நடுவது மற்றும் இல்லாதவர்களுக்கு பண உதவி செய்வது என்று நிறைய சேவைகளை செய்து வந்திருக்கிறார்.

இது எப்படியோ அவருடைய ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது. அஜித் உடைய நல்ல நோக்கத்திற்கு உதவ வேண்டுமென்ற எண்ணத்தில் அஜித் ரசிகர்களும் அந்த அறக்கட்டளைக்கு பண உதவி செய்ய முன்வந்து இருக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து எல்லாம் கோடிக்கணக்கில் அறக்கட்டளைக்கு பணம் வர ஆரம்பித்திருக்கிறது.

கேட்காமலேயே தன்னுடைய அறக்கட்டளைக்கு இவ்வளவு பணம் வருவதை பார்த்து பயந்துவிட்டார். இது தன்னுடைய அம்மாவின் பெயரில் தன் சொந்த காசை வைத்து நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட அறக்கட்டளை. இதை ஏன் மற்றவர்கள் காசு கொடுத்து நாம் நடத்த வேண்டும் என்று யோசித்து இருக்கிறார். உடனேயே அந்த அறக்கட்டளையையும் இழுத்து மூடிவிட்டார் அஜித் குமார்.

- Advertisement -

Read more

Local News