எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘துணிவு’ படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் எச்.வினோத்துக்கு அஜித், துப்பாக்கி சுட கற்றுத்தரும் காட்சியும் இடம் பெற்று உள்ளது. 43 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ ரசிகர்களை ஈர்த்துள்ளது.