Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

 அஜித் – ஷாலினி: விபத்தில் தொடங்கிய  காதல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி தம்பதி தங்கள் 23வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த எவர்கிரீன் ஜோடிக்கு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்களின் காதலுக்கு அடையாளமாக அனோஷ்கா என்கிற மகளும் ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.

ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் மலையாளம், தமிழ் படங்களில் நடித்தார்.  , இயக்குநர் சரண், அஜித் நடிப்பில் உருவாகிய ‘அமர்க்களம்’ படத்திற்கு அவரி ஷாலினியை அணுகினர். ஷாலினி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால் அந்த வாய்ப்பை நிராகரித்தார். நடிகர் அஜித் தலையிட்டு, படப்பிடிப்பால் அவரது படிப்புக்கு இடையூறு ஏற்படாது என உறுதியளித்தார்.

இந்த படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை  அஜித் பழைய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கும் போது தவறுதலாக ஷாலினியின் கை கத்தியால் வெட்டுப்பட்டது. ஷாலினி வலியில் கதறி அழுததை பார்த்த அஜித்துக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது. ஷாலினியின் உடல்நிலை குறித்து அஜித் மிகவும் கவலைப்பட்டார். இது ஷாலினியை மிகவும் பாதித்தது.

படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் ஷாலினியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார் அஜித். பயத்துடன் சொன்னார். அப்போது  ஷாலினியின் மனதில் அஜித் இடம் பிடித்திருந்தார்.

இதையடுத்து இவர்களது திருமணம் ஏப்ரல் 24, 2000 அன்று நடைபெற்றது.

இதைத்தான் அந்த பேட்டியில் அஜீத் கூறியிருந்தார்.

- Advertisement -

Read more

Local News