பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். அந்த சமயத்தில் கமல்ஹாசன் கே.எஸ்.ரவிக்குமாரிடம் “அன்பே சிவம்” திரைப்படத்தின் கதையை பற்றி கூறியிருக்கிறார். அப்போது எதிர்பாராவிதமாக ரஜினியை சந்திக்கும் வாய்ப்பு இயக்குனருக்கு கிடைத்தது.
அப்போது கமல் கூறிய கதையைப் பற்றி ரஜினியிடம் பகிர்ந்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார். மேலும் இவர் தான் யோசித்து வைத்துள்ள ஒரு தந்தை இரண்டு மகன்களுக்கு நடக்கும் புதிய கதை ஒன்றையும் ரஜினியிடம் கூறியுள்ளார்.
அதைப்பற்றி ஆர்வமாக கேட்ட ரஜினி இந்த கதைக்கு
மதனா என டைட்டில் வையுங்கள் என கூறியுள்ளார்.இந்த கதையில் கமல் நடிக்க வில்லை என்றால் நான் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.
பிறகு ஏனோ ரஜினியிடம் இதைப்பற்றி பேசாதா ரவிக்குமார் சில மாதங்கள் கழித்து “தந்தை-மகன்” கதையை அஜித்திடம் கூறியுள்ளார் உடனடியாக ஓகே சொல்லிவிட்டார் அஜித்.
கொஞ்ச நாட்களுக்கு பிறகு ரவிக்குமாரும் ரஜினியும் சந்தித்த போது நீங்கள் புதிய படம் இயக்குவாத கேள்விப்பட்டேனே என ரஜினி ரவியிடம் கேட்டுள்ளார்.ஆமாம் அந்த கதையை உங்களிடம் ஏற்கனவே கூறியிருந்தேன் என ரஜினிக்கு ஞாபகப்படுத்தினார்.
அதன் பின்தான் ரஜினிகாந்த்திற்கு அந்த “தந்தை-மகன்” கதை பற்றிய ஞாபகம் வந்திருக்கிறது. உடனே ரவிக்குமாரிடம் ஏன் இந்த கதையை நீங்கள் மீண்டும் என்னிடம் கூறவில்லை என கேட்டுள்ளார்.அப்போது ரவிக்குமார் எனக்கு இது தோன்றவில்லை என ஒரே வார்த்தையில் முடித்துவிட்டாராம்.
கே.எஸ் ரவிக்குமார் ரஜினியிடம் கூறிய அந்த கதைதான் அஜித் நடிப்பில் “வரலாறு” என
பெயர் மாற்றப்பட்டு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.