பிரான்ஸ் நாட்டின் பல நகரங்களில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப் படம் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற திரைத்துறை குறித்த கலந்துரையாடலில் இத்தகவலை, பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.
அப்போது அவர்கள், “பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் பிரெஞ்ச் படங்களைவிட துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அஜித்குமாருக்கு பாரீஸில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவ்வளவு நாட்கள் துணிவு படம் ஹவுஸ்புல் காட்சிகளில் ஓடுவது மிகப்பெரிய விஷயம்” என்று கூறினர்.
இந்த நிகழ்ச்சியின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.