Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் R.கண்ணன் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடிகர் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.

கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இந்தப் படத்தின் தமிழ் – தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை இயக்குநர் R.கண்ணன் வாங்கியுள்ளார். இதன் இரண்டு பதிப்பிலுமே ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவருக்கு ஜோடியாக நடிகர் ராகுல் ரவீந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பிரபல பின்னணிப் பாடகியான சின்மயியின் கணவராவார்.

இவர் ‘மாஸ்கோவின் காவேரி’ படத்தில் சமந்தாவுடன் அறிமுகமானார். பின்பு ‘வணக்கம் சென்னை’, யூ- டர்ன்’ மற்றும் சில தமிழ்ப் படங்களில் நடித்தார்.

அதே வேளையில் ‘அந்தாள ராட்சசி’ படம் மூலம் தெலுங்கிலும் நாயகனாக அறிமுகமாகி பிரபலமானார். தற்போது தெலுங்கிலும் இயக்குநராகவும் இருந்து வருகிறார். இந்தப் படம் மூலம் மீண்டும் தமிழ் – தெலுங்கு மொழிகளில் நடிக்கிறார் ராகுல் ரவீந்திரன்.

ஒரு பெண் படித்து பட்டம் பெற்று தனது கனவுகளையெல்லாம் திருமணத்துக்கு பிறகு நனவாக்குகிறாளா…? திருமணத்துக்கு பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது..? கணவனும் புகுந்த வீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதைச் சொல்லும் கதைதான் இத்திரைப்படம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் ஆரம்பமாகியது. முதல் நாள் படபிடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெறவுள்ளது.

- Advertisement -

Read more

Local News