பிரபாஸ், சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் நடித்த ‘ஆதிபுருஸ்ஷ்’ திரைப்பம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. ஆனால் படம் தோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக, படத்தின் கிராபிக்ஸ் சரியில்லை, பிரபாஸ் கதாபாத்திரத்தின் தோற்றம் ராமர் போலவே இல்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், அக்ஷய் குமார், பங்கஜ் திரிபாதி நடிப்பில் உருவாகியுள்ள ‘‘OMG-2′ படமும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ள நிலையில்தான் இந்த சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
இப்படத்தின் முதல் பாகத்தில் இயற்கை பேரிடரால் தனது கடை சேதமடைந்ததற்காக கடவுளின் மீது ஒருவர் வழக்கு தொடுப்பதே கதை. அதே பாணி கதைக்களத்தையே இந்த இந்த இரண்டாம் பாகத்திலும் இயக்குநர் கையில் எடுத்திருப்பது ட்ரெய்லரில் தெரிகிறது. ஆனால், சென்சார் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் ட்ரெய்லரின் முதல் காட்சியில் சிவன் நந்தியிடம் தன்னுடைய அடியாருக்கு உதவு யாரையேனும் அனுப்புமாறு கூறுவது போல கிராபிக்ஸ் காட்சி வருகிறது. எனவே, இதில் அக்ஷய் குமார் கடவுளா அல்லது கடவுளின் தூதுவரா என்பது தெளிவாக சொல்லப்படவில்லை.
தவிர அக்ஷய் குமார் தோற்றம், சிவன் போல இல்லை என்றும் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.