Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

உலக அழகி நடிகையின் முக்கிய அறிவுரை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1994-ல் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற சுஷ்மிதா சென், தமிழில் ரட்சகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ன் முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 46 வயதான அவர், திருமணம் செய்துகொள்ளவில்லை. இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். சமீபத்தில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஷ்டிக் மற்றும் ஸ்டெண்ட் பொருத்தப்பட்டதாக சுஷ்மிதா தெரிவித்து இருந்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, “மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்ட அந்த நாட்கள் எனது வாழ்க்கையில் கடினமான கட்டமாக இருந்தது. அந்த கஷ்டத்தில் இருந்து இப்போது கடந்து வந்து விட்டேன்.

அதில் இருந்து மீண்டு வாழ்வின் மறு பக்கத்துக்கு வந்து இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இப்போது அதை நினைக்கும்போது எனக்கு பயம் ஏற்படவில்லை. வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்து இருப்பதாக நினைத்துக்கொள்கிறேன். இனிமேல் கவனமாக இருப்பேன். எல்லோரும் தங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள வேண்டும்” என்று அறிவுரையும் வழங்கினார்.

- Advertisement -

Read more

Local News