Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“மோசமான டைரக்டர்கள்!”: விசித்திரா ஆதங்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிளாமர் நடிகையாக வலம் வந்த விசித்ரா  இப்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி உள்ளார். இந்நிலையில் விசித்ராவும் ஷகிலாவும் இணைந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அதில் ‘சினிமாவில் எனக்கு படு மொக்கையான கேரக்டர்கள் கொடுத்த அத்தனை இயக்குனர்களும் என்னை பொருத்தவரை ஒஸ்ட் டைரக்டர்கள் தான். ஏனென்றால் எங்களைப் போன்ற சில நடிகைகளுக்கு இருக்கக்கூடிய நடிப்பு திறமையை குறைத்து, ரொம்ப லீஸ்ட் கேரக்டர்களை கொடுத்து சினிமாவில் வளர விடாமலே செய்துவிட்டனர்.

அதிலும் எங்களை படங்களில் கவர்ச்சி நடனம் ஆடுவதற்காகவே அழைப்பார்கள். ஆனால் அதை நேருக்கு நேராகவே சொல்லாமல், கேரக்டர் இருக்கக்கூடிய கதாபாத்திரம் தான் என நம்ப வைப்பார்கள். அங்கு போய் பார்த்தால் தான் தெரியும் ஐட்டம் பாடல் இருக்கக்கூடிய முதல் சீனிலும், கடைசி சீனிலும் மட்டுமே இருப்போம். நான் ஐட்டம் நடிகையாக நடிக்க தயார், ஆனால் அந்த கேரக்டருக்கு என்றே படத்தில் ஒரு சில காட்சிகளை கொடுக்கலாம்.

வெறும் பொம்மை மாதிரி வந்து ஆடிட்டு மட்டும் போவதற்காக தான் கவர்ச்சி நடிகைகளை பயன்படுத்துகின்றனர். இப்படி எல்லாம் செய்தவர்கள், அந்த காலகட்டத்தில் முன்னணி இயக்குனர்களாக இருந்தவர்கள் என்பது தான் காலக்கொடுமை. சினிமாவில் ஹீரோ உடன் கிளாமர் ஆர்டிஸ்ட் ஆக இணைந்து ஆடுவோம், அந்தப் பாடல் முடிந்தபின் அவர் எங்களை அறைந்து விட்டு கிளம்பி விடுவார் இதுதான் நடக்கும்’ என்று நடிகை விசித்ரா வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News