தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா திரைத்துறைக்கு வந்து இருபது ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது.
இந்த நிலையில் தனது திரைப்பயணம் குறித்து சில விசயங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.
அவர், “நான் மும்பையில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது – பதினைந்து வயதில் – சினிமா துறையில் அடி எடுத்து வைத்தேன். முதலில் ‘சான்ந் சா ரோஷன் செஹாரா’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானேன். அந்த படம் தோல்வி அடைந்தது.
அதே ஆண்டு தெலுங்கில் ‘ஸ்ரீ’ என்னும் படத்தில் நடித்தேன். அதுவும் வெற்றி பெறவில்லை. இனி அவ்வளவுதான் என்றனர் பலரும்.
ஆனால் நான் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. அடுத்து ‘ஹேப்பி டேஸ்’ என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு வநதது. உற்சாகத்துடன் நடித்தேன். அப்படம், பெரிய அளவில் ஹிட் ஆனது.
அதன் பிறகு படங்கள் குவிந்தன. தமிழ் தெலுங்கு என தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. இன்று வரை பிஸியாக இருக்கிறேன்.
ஆகவே தோல்வியைக் கண்டு எவரும் துவண்டுவிடக் கூடாது” என்றார் தன்னம்பிக்கை சிரிப்புடன்.