Tuesday, October 8, 2024

ஹிந்தி பிக்பாஸ்-ல் என்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ருதிகா… சற்றும் குறையாத அதே துறு துறு குணம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹிந்தியில் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சி அதன் பின்னர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. அதேநிலையில் சமீபத்தில் தமிழில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விஜய் சேதுபதியின் தொகுப்பில் கடந்த ஞாயிறன்று தொடங்கியது. அதே நாளில் ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியும் நடிகர் சல்மான் கானின் தொகுப்பில் தொடங்கியது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், முதன்முறையாக ஒரு தமிழ் சினிமா பிரபலமானவர் இந்தி பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார், அவர் பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா அர்ஜுன் தான்.

தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் ஜோடியாக ‘ஸ்ரீ’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர், ‘ஆல்பம்’, ‘நள தமயந்தி’, ‘தித்திக்குதே’ போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களில் ‘குக் வித் கோமாளி’ என்ற ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்ற இவர், தற்போது ஹிந்தி பிக்பாஸ் சீசனில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், ஸ்ருதிகா ஏவுகணை போலக் களம் இறங்கிய போது, அங்கிருந்த பார்வையாளர்களை தமிழில் வணக்கம் கூறி வரவேற்றார். இதற்குப் பின்பு, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சல்மான் கானை வணக்கம் தமிழ்நாடு என்று கூறச் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஒரு தமிழ் நடிகையாக, ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை.

- Advertisement -

Read more

Local News