Thursday, November 21, 2024

“பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதால் ஸ்டார் ஆகிவிட முடியாது” – நடிகை ரேகாவின் பளீர் பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதால் மட்டுமே ஒருவர் ஸ்டார் ஆகிவிட முடியாது..” என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரான நடிகை ரேகா தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது இதைத் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் பேசும்போது,நானும் கே.ஜே.சரசம்மாவிடம் நடனம் கற்றுக் கொள்ளப் போனேன். மூன்று, நான்கு மாதங்கள்தான் போயிருப்பேன். ‘அலாரிப்பு’வரை போனேன். அதன் பிறகு ‘அரை மண்டியில் உட்கார்’ என்றார்கள்.  எங்கே ‘அரை மண்டி’யில் உட்கார்வது? அதற்குமேல் படங்களில் பிசியாகி விட்டேன். படங்களில் கிளிசரினைக் கொடுத்து அழுகை கதாநாயகியாகவே தொடர்ந்து நடிக்க  வைத்து விட்டார்கள்.

பரத நாட்டியம் கற்றுக் கொள்ளும்போது நாம் ஒரு சிற்பமாக மாறிவிடுவோம். அதில் சிறு தவறு ஏற்பட்டாலும் எல்லாமே வீணாகிவிடும். நான் படங்களில் தொடர்ந்து நடித்ததால் அலாரிப்பு’டன் என் நடனப் பயிற்சி  முடிந்தது. அந்த நடனத்தைத் தொடர முடியவில்லை.  இப்போது நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

நீண்ட நாள் கழித்து அந்தப் பழைய நினைவுகள் இப்போது எனக்கு வந்து விட்டன. நமக்குத் தட்டிக் கொடுக்கவும் ஊக்கப்படுத்தவும்  யாராவது ஒருவர் உடன் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

என் மகள் நியூயார்க்கில் படித்து முடித்துவிட்டு இப்போது வேலையில் சேர்ந்திருக்கிறாள். அங்கே மகளைத் தனியே விட்டுவிட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக விசா கிடைக்காமல் நாங்கள் கணவன், மனைவி மட்டும் இங்கே தனியே இருப்பது வருத்தமாக உள்ளது.

சரி… ஒரு பதினைந்து நாள் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வரலாம் என்று நினைத்தேன். ‘பிக்பாஸில்’ நடப்பது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு பதினைந்து நாள் போய்விட்டு வந்தேன். அது முடிந்தவுடன் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வந்தேன்.

‘பிக்பாஸில்’ அந்த நூறு நாட்களும் சூழல்களைத் தூண்டிவிட்டு ஒரு பரபரப்பை உருவாக்குவார்கள். உதாரணமாக சனமாக இருக்கட்டும்; வேறு யாராகவும் இருக்கட்டும். “நான்தான் சமைக்கிறேன் என்று சொன்னேனே…?” என்று சண்டை போடுவதுவரை பாருங்கள். அதுதான் மக்களுக்குப் பிடிக்கிறது. எனவேதான் சண்டை போடும் சூழ்நிலைகளை அங்கே உருவாக்குகிறார்கள். அடிக்கடி சண்டைகள் நடக்கும். வெள்ளிக்கிழமை  மீண்டும் சேர்ந்து கொள்வார்கள். சனி, ஞாயிறு மாறி விடுவார்கள். இப்படியே போய்க் கொண்டிருக்கும்.

‘பிக் பாஸ்’ மூலம் ஒரு நூறு நாட்கள்தான் பிரபலமாக இருக்க முடியும். ‘பிக் பாஸ்’ மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது. ஆனால், வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம். அங்கே போன் கிடையாது, பேப்பர் கிடையாது, யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த நிலையில் பொறுமையாக இருந்துதான் நம்மை யார் என்று காண்பிக்க வேண்டும். நான் அங்கேயிருந்த 15 நாட்களும் பொறுமையாகத்தான் இருந்தேன்.

எதையாவது சாதித்த பிறகுதான் மிகவும் அர்ப்பணிப்புடன், பொறுமையாக இருக்க வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்வேன். நான் நடித்த படங்களில் எல்லாம் படப்பிடிப்புகளுக்குச் சரியான நேரத்தில் சென்று, பொறுமையாக இருந்ததால்தான் இதை என்னால் செய்ய முடிந்தது. பொறாமை எண்ணங்களோ, கர்வமோ நமக்குள் இருக்கக் கூடாது.

‘நான் இவ்வளவு பெரிய ஆள், நான் ஏன் 17 பேருக்குச் சமைத்துக் கொடுக்க வேண்டும்?’ என்றெல்லாம் நினைக்கக் கூடாது. அதையெல்லாம் நான் நினைக்காமல் அந்த வாழ்க்கையை உற்று நோக்கிப் பார்த்தேன்.

நாம் எப்போதும் சும்மா இருக்கக் கூடாது  இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். தற்போதுகூட எனக்காகவே நான் ‘ரேகாஸ் டைரி’ என்ற பெயரில் யூ டியூப் சேனலை துவக்கி நடத்தி வருகிறேன்.

அது போல எப்போதும் நம்முடைய நம்பிக்கையைக் கைவிடக் கூடாது. கண்ணாடியில் பார்த்து நம்முடைய அழகையும் பராமரிக்க வேண்டும். அதுதான் நமது பலம். எப்போதும் என்னை நான் இளமையாகவே உணர்வேன்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News