Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“நடனம் ஆட பயந்தேன்”: மோகினி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் மோகினி. அவர் நடித்த முதல் படமான ஈரமான ரோஜாவே, வெள்ளி விழா கண்டது. தொடர்ந்து பல ஹிட் படங்களை அளித்தவர். முதல் படத்தில் இருந்து பல படங்களில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார் மோகினி.

இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் முறைப்படி கிளாசிகல் டான்ஸ் கற்றேன். பல படங்களில் ஆடி நல்ல பெயர் வாங்கினேன். ஆனால் ஒரு பாடலில் ஆட பயந்தேன். அது விக்கரமன் இயக்கிய புதிய மன்னர்கள் திரைப்படம். அதில் வரும், ‘கட்டுச்சேலை அழகுல..’என்ற பாடல்.

அது, நாட்டுப்புற நடனத்துக்கான பாடல். சரியாக ஆட முடியுமா என பயந்தேன்.  பொள்ளாச்சியில் அந்த காட்சி படமாக்கப்பட்டது. முதல் நாள் சென்னையில் இருந்து கிளம்பும் வரை, இயக்குநரிடம், நான் ஆடவில்லை என கெஞ்சிக்கொண்டே இருந்தேன். அவரோ உன்னால் நன்றாக ஆட முடியும் என்று தைரியம் கொடுத்தார்.

ஆனாலும் பயந்துகொண்டே ஆடினேன். இருந்தாலும் சிறப்பாக இருந்தது என பலரும் பாராட்டினார்கள்.. அதன் பிறகே நிம்மதி அடைந்தேன்” என்றார் மோகினி.

- Advertisement -

Read more

Local News