பிரபுதேவா தனது தனித்துவமான நடன பாணியால் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுகிறார். மலையாள நடிகையான மஞ்சு வாரியரின் நடன ஆர்வமும் மிகவும் பிரபலமானது. இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் மஞ்சு-பிரபுதேவா ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
‘ஆயிஷா’ என்ற படத்திற்காக மஞ்சு வாரியாருக்கு நடனம் கற்றுக் கொடுக்க தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்துள்ளார் பிரபுதேவா.
நடனத்தின் மீது காதல் கொண்டிருக்கும் இரண்டு பேர் இங்கே ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்பதையும் தாண்டி வேறொன்றும் இதில் இருக்கிறது.
நடிகை மஞ்சு வாரியர் “தான் நேசிக்கும் மிகப் பெரிய நட்சத்திரம் பிரபுதேவா” என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மஞ்சு வாரியர் எழுதும்போது, “நான் லாலேட்டன், மம்முட்டி, ஷோபனா சேச்சி ஆகியோரின் ரசிகைதான். ஆனால் என்னுடைய இளம் வயதில் நான் ஒருவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன் என்றால் அது பிரபுதேவாவுக்குத்தான்.
பிரபுதேவா மீது எனக்கு காதல் இருப்பது என்னை தனிப்பட்ட முறையில் அறிந்த அனைவருக்கும் தெரியும். அந்தக் காதல் அன்றும், இன்றும் இருக்கிறது” என்று பிரபுதேவா மீது கொண்ட தன்னுடைய காதலைப் பற்றி சொல்லியிருக்கிறார் மஞ்சு வாரியர்.