Touring Talkies
100% Cinema

Wednesday, October 8, 2025

Touring Talkies

“எஸ்.ஏ.சந்திரசேகர் முதலில் தன் வீ்ட்டில் இருக்கும் குழப்பத்தை சரி செய்யட்டும்..” – நடிகை கஸ்தூரியின் அட்வைஸ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னையில் நேற்று ஒரு தனியார் அமைப்பு நடத்திய விழாவில்  கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, விழா முடிந்த பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “எனக்கு இப்போதும் பல கட்சிகளில் இருந்தும் அழைப்பு வருகிறது. ஆரம்பித்த கட்சி, ஆரம்பிக்கப் போகும் கட்சி என்றில்லாமல் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் அழைப்பு வந்தவண்ணம் உள்ளது.

ஆனால், பெண்களை எந்தக் கட்சி மரியாதையாக நடத்துகிறதோ.. பெண்மையை எந்தக் கட்சி போற்றுகிறதோ.. நான் வணங்கும் இந்து மதத்தையும், இந்து மதக் கடவுளர்களையும் யார் அவதூறு பேசாமல் இருக்கிறார்களோ.. அந்தக் கட்சியில்தான் நான் இணைவேன்..” என்றார்.

“எஸ்.ஏ.சந்திரசேகர் துவக்கியுள்ள கட்சியில் சேர்வீர்களா..?” என்று கேட்டதற்கு, “அவர் எல்லாருக்கும் அப்பாதான். எனக்கும் அப்பாதான். நான் அவருடைய இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன்.

இப்போது அவர்ஆரம்பித்திருக்கும் கட்சியினால் அவருடைய வீட்டிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவருடைய மனைவியும், மகன் விஜய்யும் அதை எதிர்த்திருக்கிறார்கள்.

முதலில் எஸ்.ஏ.சி. தன் வீட்டில் இருக்கும் குழப்பத்தை சரி செய்ய வேண்டும். பின்பு கட்சி வேலைகளை அவர் பார்ப்பது அவருக்கும் நல்லது.. எல்லாருக்கும் நல்லது..” என்று அட்வைஸ் செய்தார்.

- Advertisement -

Read more

Local News