பிரபல இந்தி நடிகை பூமி பட்னேகர், சுற்று சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளார்.
இது குறித்து அவர், ” மரங்கள்தான் சுவாசிக்க நமக்கு ஆக்சிஜனை கொடுக்கின்றன. ஆனால் மரங்களை வெட்டிக்கொண்டே இருக்கிறோம். ஒரு கட்டத்தில் மரங்களே இல்லாவிட்டால் நம் நிலைமை என்ன என்பதை யோசிக்க வேண்டும். அனைவரும் மரம் நட வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.