Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

தெலுங்கு ‘நான் ஸ்டாப் பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி சாம்பியன் பட்டம் வென்றார்.

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு நான் ஸ்டாப் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி ‘சாம்பியன்’ பட்டத்தை வென்றுள்ளார்.

தொலைக்காட்சியில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் புகழ் பெற்றது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி. இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளில் இந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

சென்ற வருடத்தில் இருந்து ரெகுரலான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியுடன் 24 மணி நேரமும் காட்டப்படும் நான் ஸ்டாப் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. தமிழிலும் சமீபத்தில் இந்த நான் ஸ்டாப் ‘பிக்பாஸ்’ Unlimited என்ற பெயரில் நடத்தப்பட்டது.

தெலுங்கில் கடந்த 75 நாட்களாக இந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியின் முடிவில் தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிந்து மாதவி, இந்த நான் ஸ்டாப் தெலுங்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் சாம்பியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தெலுங்கு ‘பிக்பாஸ்’ வரலாற்றில் டைட்டிலை வென்ற முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையையும் பிந்து மாதவியே பெற்றார். மேலும் அவருக்கு பரிசுத் தொகையாக 50 லட்சம் ரூபாயும், கேடயமும் வழங்கப்பட்டது.

பிந்து மாதவி தமிழில் நடத்தப்பட்ட முதல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின்போது வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்து கலந்து கொண்டவர். வைல்ட் கார்டு என்ட்ரியாக தமிழ் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குள் நுழைந்த முதல் போட்டியாளரும் பிந்து மாதவிதான்.

இந்த தெலுங்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குள் ‘சேலஞ்சர்’ என்ற பெயரில் உள்ளே நுழைந்த பிந்து மாதவி அத்தனை போட்டியாளர்களுக்கும் நிஜமாகவே திறமையான, நேர்மையான, கடுமையான போட்டியாளராகவே இருந்தார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சக போட்டியாளர்கள் பிந்து மாதவிக்கு ‘சூர்ப்பனகை’ என்று பட்டப் பெயர் சூட்டி அழைத்தனர். இருந்தாலும் வெளியில் இருந்த அவரது ரசிகர்கள் அவருக்கு ‘பெண் புலி’ என்று பெயர் சூட்டி அழைத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு பெரும் ஆதரவினை கொடுத்தனர்.

பரிசினை வென்ற பிறகு பிந்து மாதவி பேசும்போது, “இந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு வந்ததில் நிறையவே கற்றுக் கொண்டேன். இன்னும் சொல்லப் போனால் பல விஷயங்களுக்கு எனக்கு குருவாக இந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு இருந்தது. என்னுடைய பலம், பலவீனம் இதை இங்கேதான் அறிந்து கொண்டேன். இங்கே நான் அறியாமல் செய்த என் தவறுகளுக்கு மன்னிப்பும் கேட்கிறேன்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News