Touring Talkies
100% Cinema

Friday, September 12, 2025

Touring Talkies

விஜயகாந்த் செய்த அந்த உதவி! நெகிழ்ச்சியான சம்பவம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு கருப்பு எம்ஜிஆர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். அடுத்தவருக்கு உதவி செய்வது என்றால் ஓடோடி வருவார். அப்படியோர் நெகிழ்ச்சியான சம்பவத்தை நடிகர் மீசை ராஜேந்திரன் பகிர்ந்துள்ளார்.

“மூத்த நடிகை தேனி குஞ்சரம்மாள் இறந்தபோது, இறுதிச் சடங்கை செய்வதற்கு கூட காசு இல்லாமல் குடும்பத்தினர் தவித்தனர். இந்தத் தகவல் விஜயகாந்துக்கு தெரிய வந்தது. உடனே அவர், என்னை அழைத்து 10000 ரூபாயை கையில் கொடுத்தார். குஞ்சரம்மாளின் மகளிடம் இதைக் கொடுத்து வா என்றார். அதைவிட முக்கியமாக, இந்த விசயம், யாருக்கும் தெரியக்கூடாது என்றார். இதுவரை இந்த விசயத்தை வெளியில் சொல்லவில்லை. ஆனால் இப்போது நெகிழ்ச்சியில் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News