Wednesday, November 20, 2024

ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை சொல்லணும்!: அர்ஜூன் சம்பத் அதிரடி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘லியோ பட  ரிலீஸின் போது, பிரச்சினை ஏற்படாமல் இருக்க நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்!’ என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் விலியுறுத்தி உள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஏனென்றால் ஏற்கெனே அர்ஜூன் சம்பத், “விஜய் அரசியலுக்கு வரட்டும். ஆனால் நேர்மையாக வர வேண்டும். கருப்பு பணம் வைத்திருக்கக் கூடாது. லஞ்சம், ஊழல் பண்ண கூடாது. சாராயம் ஒழிக்க வேண்டும், சாராய, புகை காட்சிகளில் நடிக்கக் கூடாது”  என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்தார்.

மேலும் விஜயை, ஜோசப் விஜய் என பேச ஆரம்பித்தார்.

தவிர, கடந்த 2022ல் வேறு ஒரு பிரச்சனை வெடித்தது.

அப்போது மதுரை ஆதீனம்,  “ விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விநாயக கடவுளை கேலியாக பேசி இருக்கிறார். ஆகவே அவர் நடித்த திரைப்படங்களை யாரும் பார்க்க கூடாது” என பேசினார்.

இதைத் தொடர்ந்து விஜய் ரஜிகர்கள், ‘ஆதினம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா?’ என மதுரையில் போஸ்டர் ஒட்டினர்.

இந்த சூழலில்தான், மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு தர வேண்டி மதுரை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் அர்ஜுன்சம்பத் மனு அளித்தார் .

இப்படிப்பட்டவர், தற்போது, ‘லியோ திரைப்பட ரிலீஸின் போது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில்  தனது ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை வழங்கவேம்டும்’ என்று வலியுறுத்தி இருப்பதால்தான் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

- Advertisement -

Read more

Local News