நடிகர் விஜய்யை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான தோனி இன்று சந்தித்துப் பேசினார்.
நடிகர் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ‘கோகுலம் ஸ்டூடியோ’வில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங்கில் விஜய்யுடன் யோகிபாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இன்று இந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்தார்.
அங்கே அவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியிருக்கிறார். சந்திப்பு முடிந்த பிறகு தோனியை விஜய் கார்வரையிலும் அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இந்தச் சந்திப்பு எதற்காக என்று தெரியவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் இப்போது எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது.
விரைவில் இதன் காரணம் தெரிய வரலாம்..!




