Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

“நடிகர் விஜய் தன்னிடம் பேசியது என்ன..?” – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2 நாட்களுக்கு முன்பாக நடிகர் விஜய், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

இந்தச் சந்திப்பின்போது ‘மாஸ்டர்’ படத்திற்காக 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி, கூடுதல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி.. இரவு நேர ஊரடங்கினை ரத்து செய்வது.. போன்ற சில கோரிக்கைகளை விஜய் தனக்காக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்ததாகச்  செய்திகள் தெரிவித்தனர்.

ஆனால், இன்று கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது, விஜய் தன்னிடம் என்ன கேட்டார் என்கிற விவரத்தை வெளியிட்டார்.

“திரையரங்குகள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை என்றும் அனைத்து திரையரங்குகளும் திறப்பதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று விஜய் தன்னிடம் கேட்டுக் கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News