சென்னை திரைப்பட தணிக்கை அதிகாரியாக பதவி வகுத்தவர், ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ்.
அந்த அனுபவங்களில் சிலவற்றை தனது முகநூல் பக்கத்தில் எழுதி வருகிறார்.
அதில் ஒன்று…
“முன்னணி நடிகர் ஒருவர், தான் தயாரித்த படத்தை சென்சாருக்கு அனுப்பினார். நடிகை ஒருவருடன் அவர் மிகமிக நெருக்கமாக நடித்த பல ஷாட்கள் இருந்தன. அவற்றை ‘கட்’ செய்யச் சொன்னோம்.
சற்று நேரத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து, ‘படத்தில் ‘கட்’களை குறைக்க சாத்தியம் இருக்கிறதா?’ என்றார்.
நான், ‘சார்! நீங்க பேமிலியோடு அந்தப் படத்தை பாருங்க. பிறகு, நாங்கள் கொடுத்திருக்கிற ‘கட்’களை வேண்டாம் என்று சொல்லுங்கள். நான் ஏற்றுக்கொள்கிறேன்!” என்றேன்.
அமைச்சர் அடிப்படையில் நல்லவர் போலிருக்கிறது. ‘உங்களுடைய முடிவில் தலையிட விரும்பவில்லை. அதே நேரம், அந்த நடிகர் கேட்கும்போது, மினிஸ்டர் பேசியதாக கூறிவிடுங்கள். ஏனென்றால், தேர்தலின் போது எனக்காக பிரச்சாரம் செய்தவர் அவர்!’ என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
சிறிது நேரத்தில் ஓடோடி வந்த நடிகர், ‘மத்திய அமைச்சர் போன் செய்திருப்பாரே!’ என ஏளனம் கொப்பளிக்க, கேட்டார்.
நான் சாந்தமாக, ‘ஆமாம்’ என்றேன்.
அவர், ‘அப்போ, ‘கட்’ எதுவுமில்லாம படத்தை கொண்டு போகலாமில்லையா?’ என்றார்.நான் நிதானமாக, ‘சாரி சார்! ‘கட்ஸ்’ விஷயத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை’ என்றேன்.
மனிதர் ஆடிப்போய்விட்டார். பிறகு வேறொரு யுக்தியை பிரயோகித்தார்.
“ஐ ஹெல்ப் யு.. யு ஹெல்ப் மீ” என்றார்.
நான், ‘நன்றி. உங்கள் ஹெல்ப் எனக்கு வேண்டாம். படத்தில் சென்சார் ‘கட்’ சொன்னவற்றை நீக்கிவிட்டு சர்டிபிகேட்டை வாங்கிச்செல்கிற வழியைப் பாருங்கள்’ என்று அனுப்பி வைத்தேன்” – இவ்வாறு ஞான ராஜசேகரன் எழுதி உள்ளார்.
ஆனால் அந்த நடிகரின் பெயரை குறிப்பிட வில்லை.
இப்படி ‘கட்’ விசயத்தில், ‘நோஸ்கட்’ வாங்கிய அந்த நடிகர் யாராக இருக்கும்..?
‘செக்ஸ் காட்சியில் தாராளமாக நடிப்பவர், மத்திய அமைச்சருக்கு நெருக்கமானவர், அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தவர்’ என்றெல்லாம் ஹிண்ட்ஸ் இருக்கின்றன.
கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்!