Thursday, April 11, 2024

“என்னை நானே…!”: டென்சன் ஆன சிவகுமார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகாபாரதம், ராமாயணம் ஆகியவை குறித்து சிறப்பாக சொற்பொழிவு ஆற்றி கவனத்தை ஈர்த்தார் நடிகர் சிவகுமார். அடுத்து, திருக்குறளில் உள்ள நூறு  குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ப வாழ்ந்த மனிதர்கள் பற்றியும், நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் பேசினார்.

இந்த உரை, பொங்கல் பண்டிகையை ஒட்டி புதிய தலைமுறை தொலைக் காட்சியில் மூன்று நாட்கள், மூன்று பகுதிகளாக ஒளிபரப்பாக இருக்கிறது.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில்,  அந்த உரை ஒளிபரப்பப்பட்டது. மிகச் சிறப்பான உரை. அனைவரும் ரசித்தனர்.

பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் சிவகுமார்.

அப்போது, ஒரு செய்தியாளர், “குறள் நெறிக்கு ஏற்ப வாழ்ந்த நூறு பேர் பற்றி பேசியிருக்கிறீர்கள். சிறப்பாக இருந்தது. நீங்களும் அப்படித்தான் வாழ்கிறீர்கள். அந்த வாழ்க்கை அனுபவத்துடன் குறளை ஒப்பிட்டு பேசலாமே” என்றார்.

இதற்கு ஏனோ சிவகுமார் டென்சன் ஆகிவிட்டார். அவர், “என்னைப் பற்றித்தான் ஒரு குறள் சொல்லி இருக்கிறேனே. ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற என் அனுமதி இல்லாமல் ஏராளமான பேர் செல்பி எடுத்தார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தட்டிவிட்டேன். உடனே, கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

என் மீதுதான் தவறு. பெற்றோர், மனைவி, பிள்ளைகளிடம்தான் கோபத்தைக் காண்பிக்க வேண்டும்.  மற்றவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது.

அன்று நான் தவறு செய்துவிட்டேன். அதற்காகத்தான்,   என்னை நானே செருப்பால் அடித்துக்கொள்வது போல, ஒரு அத்தியாத்தை இந்த உரையில் சேர்த்து இருக்கிறேன்.

இதற்குப் பொருத்தமாக, செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்? என்ற குறளை சுட்டிக்காட்டி உள்ளேன்” என்று ஆதங்கத்துடன் பேசினார்.

அவரது திடீர் ஆதங்கம் அரங்கில் இருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

- Advertisement -

Read more

Local News