Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

‘ரஜினியுடன் நடிக்க செந்தாமரை பயப்படுவாரு’.. அவர் மனைவியே சொல்கிறார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1957-ம் ஆண்டு வெளியான மாயா பஜார் என்ற படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் செந்தாமரை. தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்கள் பலருடன் பல வெற்றிப்படங்களில் நடித்தவர்.

அதேபோல் ரஜினியின் மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, பொல்லாதவன், கமலுடன் காக்கிச்சட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்துடன் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள செந்தாமரை ரஜினியுடன் நடிக்க பயப்படுவார் என்று அவரது மனைவி கௌசல்யா செந்தாமரை தெரிவித்துள்ளார்.

சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் பேசியுள்ள அவர் கூறுகையில், “ரஜினி குடுமபத்தினருக்கும் எங்களுக்கும் ஆழமான நட்பு உள்ளது. ஒருமுறை ரஜினியின் குடும்பத்தில் பிரச்சினை வந்தபோது ரஜினியை சராமாரியாக திட்டிவிட்டதாக நான் கேள்விப்பட்டேன். இதை நடிகர் முத்துராமன் என்னிடம் தெரிவித்தார். அதேபோல் அவர் ரஜினியுடன் இணைந்து நடித்த தம்பிக்கு எந்த ஊரு என்ற படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

மூன்று முகம் படத்தில் இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் தான் படம். இந்த படமும் எனக்கு பிடிக்கும். அதே சமயம் மற்ற நடிகர் நடிகைகயுடள் நடிக்கும்போது என் கணவர் பயப்படுவார். நடிப்பில் அவர்கள் நம்மை விட அதிக பர்பாமன்ஸ் செய்து நாம் இந்த சீனில் தெரியாதபடி ஆகிவிடுமோ என்ற பயம். இது அதிகமாக ரஜினி படத்தில் தான் நடக்கும். ஆனாலும் இருவரும் போட்டி போட்டு நடித்து பாராட்டுக்களை பெறுவார்கள் அப்படி ஒரு படம்தான் மூன்றுமுகம்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News