Friday, April 12, 2024

“நிஜ ஹீரோக்களைத்தான் நாம் போற்ற வேண்டும்…” – நடிகர் சத்யராஜ் பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சத்யராஜ் நாயகனாக நடிக்க, ஹனிபீ கிரியேசன்ஸ் சார்பில் சஞ்சீவ் மீராசாகிப் தயாரித்துள்ள திரைப்படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்.’

‘கருட வேகா’ தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைக்க, படத் தொகுப்பை சரத் கவனிக்கிறார்.

குட்டிப் புலி’, ‘ஜெயில்’ ஆகிய படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் கல்லெரி இந்தப் படத்தின் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் நிஹிதா வின்சென்ட் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணி புரிய, தினேஷ் சுப்பராயன் சண்டை பயிற்சி செய்திருக்கிறார். அறிமுக இயக்குநரான தீரன் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.

வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகிறது. இதையொட்டி நேற்று இப்படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சத்யராஜ், சிபிராஜ், மயில்சாமி, சந்துரு, எஸ்.ஏ. சந்திரசேகர், திலகவதி ஐ.பி.எஸ்., நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் அது சார்ந்த விருந்தினர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் சத்யராஜ் பேசுகையில், “நிழல் ஹீரோக்களைப் பார்த்து விசில் அடிங்க. கை தட்டுங்க. ஆனால், நிஜ ஹீரோக்களைத்தான் போற்ற வேண்டும். வேதம் புதிது’ படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினையை எம்.ஜி.ஆர்.தான் தீர்த்து வைத்தார். அதேபோன்று பெரியார்’ படத்திற்கும் பிரச்சினை வந்தது. ‘பெரியார்’ படம் வெளியானதற்கு காரணம் இங்கே வந்துள்ள நீதியரசர் சந்துருதான்.

தணிக்கைச் (சென்சார்) சான்றிதழ்கள் தற்போது பல வடிவங்களில் உள்ளன. அதனால் மேடையில் பேசும்போது பார்த்து பேச வேண்டியுள்ளது. பெரியார், அம்பேத்கர் படங்கள் உள்ள திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன. சமூகநீதிப் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுகின்றன. ஆங்கிலம் பேசுவது என்பது அறிவுக்காகத்தான். நீதியரசர் சந்துரு அவர்களே சர்டிபிகெட் குடுத்திட்டார்.. தீர்ப்புகள் விற்கப்படலாம்’ டைட்டில் ஓகே என்று.. பிறகென்ன.. நிச்சயமாக இத்திரைப்படம் தடைகளை உடைத்து திரைக்கு வரும்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News