நடிகர் அஜித்தின் மனைவி ஷாலியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. இவர், திரவுபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
45 வயதாகும் ரிச்சர்ட் ரிஷி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இதுவரை ரகசியம் காத்து வந்தார். இந்த நிலையில், தனக்கு யாஷிகா ஆனந்த் முத்தம் கொடுக்கும் படத்தை வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து இருவரின் காதல் உறுதி செய்யப்பட்டதாக கூறி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனஆல் இருவருமே இது குறித்து வாய் திறக்கவில்லை.
இந்த நிலையில், குறிப்பிட்ட படம், இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தில் வரும் காட்சி என்ற தகவல் கசிந்துள்ளது.
பட விளம்பரத்துக்கு என்னமா ஐடியா பண்றாங்க!