Thursday, April 11, 2024

“ஒரு கோடி ரூபாய் வாங்கிய போது..!”: ராஜ்கிரண் நினைவலை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இருபது வருடங்களுக்கு முன்பாக, என்னப் பெத்த ராசா படத்தில் முதன் முதலாக நடித்ததில் இருந்து இன்று வரை, மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நடிகராக உள்ளார் ராஜ்கிரண். நாயகனாக மட்டுமின்றி, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மனதில் நிற்பவர். தற்போது இவரது நடிப்பில் வெளியாகி உள்ள, ‘பட்டத்து அரசன்’ படமும் ரசிகர்களின் பேராதரவோடு திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் ராஜ்கிரண், தான் முதன் முதல் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். அவர், “நான் 16 வயதில் சென்னைக்கு வந்து முதன்முதலில் வாங்கிய சம்பளம் 4 ரூபாய் 50 பைசா. அப்போது நான் தினக்கூலியாக இருந்தேன். பிறகு, என்னுடைய உழைப்பையும், நேர்மையையும் பார்த்து நான் வேலை பார்த்த கம்பெனியிலேயே கிளர்க்காக பதவி உயர்வு கொடுத்தார்கள்.  அப்போது மாதம் 150 ரூபாய் சம்பளம். அடுத்து  170 ரூபாயாக உயர்த்தி கொடுத்தார். அந்த ஒரு கம்பெனியில் தான் நான் வேலை பார்த்தேன்.

இதையடுத்து சொந்தமாக விநியோக கம்பெனி ஆரம்பித்து படிப்படியாக சினிமாவில் வளர்ந்தேன். அதன்பின் நானே படம் இயக்கி நடித்தேன். அதெல்லாம் பெரிய அளவில் ஹிட் ஆகின. அதையடுத்து என்னை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்காக நடிக்க அழைத்தபோது 1 கோடியே பத்து லட்சம் ரூபாய் சம்பளமாக தருவதாக சொன்னார்கள். இதை என் உழைப்புக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக தான் பார்த்தேன். 4 ரூபாய் 50 பைசா சம்பளம் வாங்கும்போது என்ன உணர்வு இருந்ததோ அதே தான் ஒரு கோடி சம்பளம் வாங்கும் போதும் இருந்தது” என கூறினார் ராஜ்கிரண்.

ஞானியைப் போன்ற மனநிலை!


 

- Advertisement -

Read more

Local News