Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து, தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

“ஆரம்ப காலகட்டத்தில் தனது ஸ்கூட்டரில்தான் சென்னை முழுக்க சுற்றி வருவார், ரஜினி. முரட்டுக்காளை, போக்கிரிராஜா படங்களுக்குப் பிறகு பெரிய அளவில் பிரபலம் ஆகிவிட்டார். ஆனாலும் இந்த ஸ்கூட்டர் மோகம் அவரை விடவில்லை.

ஒருநாள் ஸ்கூட்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுவிட்டது. ரஜினிக்கு முகத்தில் அடிபட்டுவிட்டது.

அவரை நலம் விசாரிக்கப்போன நான், ”நான் உங்களை நடிகர் என்று மட்டும் நினைத்துச் சொல்லவில்லை. நீங்கள் ஒரு பெண்ணுக்குக் கணவர். குழந்தைக்குத் தந்தை. உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. உங்களை நம்பி கணிசமான தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். உங்களது படங்களில் இந்த நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்குமேல் முடக்கப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் நீங்கள் சிந்திக்காமல் இருக்கலாமா? ஸ்கூட்டரில் செல்ல வேண்டிய அவசியம் அப்படி என்ன இருக்கிறது? உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள்? இனிமேலாவது ஸ்கூட்டர் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்” என்று கேட்டேன்.

ரஜினியோ, ”ஸ்கூட்டர் ஓட்டறதெல்லாம் சும்மா ஜாலிக்குத்தான். எனக்கு எதுவும் ஆகாது” என்றார்.

”இனி ஸ்கூட்டர் ஓட்டுவதில்லை என்று உறுதி சொன்னால்தான் நான் இங்கிருந்து புறப்படுவேன்” என்றேன். ரஜினி சிரித்தபடியே அதை ஏற்றுக் கொண்டார். எனக்குத் தெரிந்து அப்புறம் ரஜினி ஸ்கூட்டர் ஓட்டவில்லை” என்று தெரிவித்துள்ளார் ஏவிஎம் சரவணனந்.

 

- Advertisement -

Read more

Local News