Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

நடிகர் சூர்யாவுக்கு நடிகர் ராதாரவி கடும் கண்டனம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.

உண்மையில் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகமானோர் பார்வையிட்ட திரைப்படம் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்தான்.

ஆனால், இந்தப் படத்தைத் தியேட்டர்களுக்குத் தராமல் ஓடிடி தளத்தில் வெளியிட்டதற்காக நடிகர் சூர்யாவை, நடிகர் ராதாரவி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், “சமீபத்தில் ஒரு விளம்பரம் ஒன்றை பார்த்தேன். ‘சூரரைப் போற்று’ வெற்றிகரமான 25-வது நாள் என்று போட்டிருந்தது. ஏது.. தியேட்டரில் வெளியாகி 25 நாள் கொண்டாடுதோன்னு நினைச்சேன். அப்புறம்தான் சொன்னாங்க.. ஓடிடில ரிலீஸாகி இந்தப் படம் இன்னியோட 25-வது நாளு. அதுக்குத்தான் விளம்பரம் கொடுத்திருக்காங்க..

அதென்ன ஓடிடி..? தியேட்டர்கள் இல்லாமல் சினிமா துறை இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்குமா.. தியேட்டர்களில் படத்தைக் கொண்டு வந்தால்தான் ஒரு ரசிகனாக ஒரு படத்தை உணர்ந்து ரசிக்க முடியும். ஓடிடில வீட்ல உக்காந்து பார்க்குறதுல என்ன சந்தோஷம் வந்திரப் போகுது..? ஆனால், அந்தப் படம் ரொம்பவும் அருமையான படம். நான் இல்லைன்னு சொல்லலை.

நாடகக் கொட்டகை, சினிமா தியேட்டர் என்று திரைப்படத் தொழில் மாறினாலும் தியேட்டர்கள்தான் எப்போதும் நிரந்தரமானது. இதை பெரிய நடிகர்களே புரிந்து கொள்ளாமல் ஓடிடிக்கு கொண்டு போனால், கடைசியா இவர்களை நம்பியிருக்குற தியேட்டர்களை என்ன செய்வது..? சுத்தமா மூடிரலாமா..? அது தப்பில்லையா..?

சினிமான்னா அது தியேட்டருக்குத்தான் வரணும். அதுதான் தொழிலை வளர்த்தெடுக்கும். நீங்க ஓடிடிக்கே போயிட்டீங்கன்னா உங்களுக்கே அடுத்தத் தலைமுறை ரசிகன் கிடைக்க மாட்டான்..

சூர்யா தம்பி செஞ்சது ரொம்பத் தப்பு. நான் எங்கேயாவது அந்தத் தம்பியை பார்த்தால் கண்டிப்பாக இதைப் பற்றிக் கேட்பேன்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ராதாரவி.

- Advertisement -

Read more

Local News