விசு இயக்கிய திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் எம்.எஸ்.பாஸ்கர். தொடர்ந்து பல படங்களில் நடித்ததோடு, டப்பிங் குரல் கொடுக்கும் வேலையையும் செய்து வந்தார்.
எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறி நடிக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவர் இவர்.
இந்நிலையில், ராதிகாவின் தயாரிப்பில் வெளியான செல்வி என்ற சீரியலில் வில்லனாக நடித்தார்.
இது குறித்து தெரிவித்த அவர், “ஏற்கெனவே, சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் காமெடி வேடத்தில் நடித்தபோது பலரும் பாராட்டினர். ஆனால் அடுத்து வந்த செல்வி தொடரில் நான் வாய்ப்பு கிடைத்து. இந்த தொடரில் ஆண்டவர் லிங்கம் என்ற வில்லன் வேடத்தில் நடித்தேன்.
சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் காமெடியாக பார்த்து ரசித்த பலரும் வில்லனாக நடிப்பது ஏன் என்று கேட்க தொடங்கிவிட்டனர். என் மனைவி சாப்பாடு போட மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
அதேபோல் என் மகள் படிக்கும் பள்ளியில் இருந்து என்னை அழைத்து வில்லன் ரோலில் நடிப்பது குறித்து திட்டினார்கள். இதையெல்லாம் விட நடிகர் சரத்குமார் நெப்போலியன் இருவருமே என்னிடம் கோபப்பட்டார்கள். பட்டாபியாக ரசிக்க வைத்த நீ இப்போது வெறுப்பை ஏற்படுத்திவிட்டாய் உன் மூஞ்சில் விஷம் சொட்டுது என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.