நடிகர் விஜயகாந்தின் உதவும் குணம், வள்ளல் தன்மை போலவே அவரது கோபமும் பிரசித்தம். இது குறித்து, டிகர் மீசை ராஜேந்திரன் கூறிய ஒரு சம்பவம்:
“இயக்குனர் கே.பாலச்சந்தர் மறைக்கு நாங்கள் அனைவரும் சென்றிருந்தோம். அங்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பேட்டி கொடுக்காமல் திரும்பிவிட்டார் விஜயகாந்த். அதன்பிறகு மறுநாள் நான் மதியம் ஒன்னறை மணியளவில் ஆபீஸ்க்கு செல்கிறேன். அப்போது கேப்டன் சாப்பிட வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறார்.
என்னை பார்த்ததும் என்னப்பா நேற்று நாம் பேட்டி கொடுக்காமல் வந்தது குறித்து எதாவது சொன்னாங்களா என்று கேட்டார். 2-3 நடிகர்கள் போன் செய்து கேப்டன் மாலை போட்டுவிட்டு பேட்டி கொடுக்காமல் வந்துவிட்டார் என்று கூறியதாக சொன்னேன். அப்போது கேப்டனின் உதவியாளர் பார்த்த சாரதி கேப்டன் பின்னால் இருந்து சொல்லாதே சொல்லாதே என்று கை காண்பித்தார். நான் அதை பார்த்தபோது கேப்டன் என் பார்வை அங்கு சென்றதை கவனித்தார்.
உடனே பின்னால் திரும்பி பார்த்தபோது பார்த்த சாரதி கை அசைத்ததை பார்த்துவிட்டு கோபத்தில் பளார் என்று அறைவிட்டார். இப்படித்தான் அனைத்தும் என்னிடம் இருந்து மறைத்துவிடுகிறீர்களா என்று கேட்டார். அதன்பிறகு அதேகோபத்துடன் காரில் ஏறி சென்றுவிட்டார்.
இந்த நேரத்தில், வீட்டில் இருந்து கேப்டன் போன் செய்கிறார். ரிசப்சனில் இருந்தவரிடம் மட்டன் சிக்கன், மீன் நண்டு என சாப்பாடு வாங்கி பார்த்த சாரியிடம் கொடுக்க சொன்னார்” என்றார் மீசை ராஜேந்திரன்.