நடிகர் கார்த்திக் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல நடிகரான கார்த்திக்கிற்கு நேற்று இரவு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மலர் போர்ட்டீஸ் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கோவிட்-19 டெஸ்ட் எடுக்கப்பட்டது. அது நெகட்டிவ் என்று தெரிய வந்தது.
இருந்தும் மூச்சு விடுவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டதையடுத்து அவர் தொடர்ந்து சில நாட்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சையெடுத்து வருகிறார் நடிகர் கார்த்திக்.
முன்னதாக நேற்று நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கார்த்திக், தான் இந்தத் தேர்தலில் பா.ஜ.க.-அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கூறியிருந்தார்.
அதிலும் குறிப்பாக தனது சக நடிகையான குஷ்பூவுக்கு ஆதரவாக ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரச்சாரம் செய்யவிருப்பதாகவும் கூறியிருந்தார்.
“அதற்குள்ளாக இப்படி நடந்துவிட்டது….” என்று வருந்துகிறார்கள் பா.ஜ.க. தொண்டர்கள்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2021/03/karthick-hospital-4.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2021/03/karthick-hospital-3.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2021/03/karthick-hospital-2.jpg)