ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் ‘கணம்.’ அறிமுக இயக்குநரான ஸ்ரீகார்த்தியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், சர்வானந்த் நடிச்சிருக்கிறார். அதேபோல 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமலா இந்த திரைப்படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். அத்துடன் அந்தப் பாடலுக்கான ப்ரோமோ வீடியோவிலும் நடித்துக் கொடுத்திருக்கிறார் கார்த்தி.
‘ஆக மாறிப் போச்சு’ என தொடங்கும் அந்தப் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழைப் போலவே தெலுங்கிலும் கார்த்தியே அந்தப் பாடலைப் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாடலை கேட்டுவிட்டு திரையுலகப் பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
ஜீ.வி.பிரகாஷ் : Wow! Uber cool @Karthi_Offl ’s pleasant singing and gracious grooving for #Maaripocho! Namma padathulayum try pannuvoma @prabhu_sr?
சிம்பு : Kudos to team #Kanam #OkeOkaJeevitham innemae ellamae #Maaripocho. Nice song @karthi_offl brother ❤️
கீர்த்தி சுரேஷ் : You are superb as a singer @Karthi_Offl . Looking damn stylish! #Maaripocho sounds uber cool. Best wishes to Team #Kanam
ஆண்ட்ரியா : Recent addition to the playlist #Maaripocho? – https://youtu.be/MDoDwfPnSEI Neatly done @Karthi_Offl 🙂 All the best team #Kanam