Friday, November 22, 2024

“அரசியலில் இருந்தாலும் கலைத் துறையிலும் தொடர்ந்து நீடிப்பேன்” – நடிகர் கமல்ஹாசனின் அறிவிப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘மக்கள் நீதி மையம்’ என்ற தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வரும் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபோது, “இந்தியன்-2 திரைப்படம்தான் எனது கடைசிப் படம். இனிமேல் நடிக்க மாட்டேன்…” என்று சொல்லியிருந்தார். ஆனால், இப்போது ‘விக்ரம்-2’ என்ற படத்தையும் துவக்கியிருக்கிறார்.

இதனால் தான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து கமல்ஹாசன் பின் வாங்குகிறாரோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கடைசியாக அவர் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், “நான் கலைத் துறையில் இருந்து முற்றிலுமாக விலகி விடுவேன் என்ற பயமே வேண்டாம். நான் எதிலும் பின் வாங்கவே மாட்டேன். நான் முன்பு கைவிட்ட படங்களைக்கூட இப்போது மீண்டும் துவக்கலாமா என்று யோசித்து வருகிறேன். இன்னமும் பிற்காலங்களில் அந்தத் திரைப்படங்கள் மீண்டும் உயிர் பெறும். அந்த மாதிரி திட்டங்கள் இன்னமும் எனக்குள் இருக்கிறது.

நான் வெறும் நட்சத்திர வாழ்க்கையை மட்டுமே நம்பியிருப்பவன் அல்ல. நான் ஒரு டெக்னீசியன். திரைக்குப் பின்னாலும் நான் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கலாம். பின் வாங்குவது என்பது எப்போதுமே என்னுடைய வரலாற்றில் நடக்கவே இல்லை. இன்னொருவர் போன்று நானும் இருப்பதாகச் சொல்லிவிட முடியாது. திரையுலகத்தில்கூட அவரவர்க்கு தனித்தனி குணாதிசியங்கள் இருந்தன..” என்று சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News