Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

நடிகர் ‘ஜெயம்’ ரவியின் ‘பூமி’ திரைப்படம் ‘ஹாட் ஸ்டாரில்’ வெளியாகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ‘ஜெயம்’ ரவி நடித்த ’பூமி’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜெயம்’ ரவியின் மாமியாரான சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் இந்த ’பூமி’ திரைப்படம் நடிகர் ‘ஜெயம்’ ரவியின் 25-வது படமாகும்.

இந்தப் படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். லஷ்மண் இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படம் கடந்த மே 1-ம் தேதி வெளியாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் வெளியாகவில்லை.

இதைத் தொடர்ந்து ஓடிடி தளங்களில் இந்தப் படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கடந்த தீபாவளியன்று சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் வெளியிடலாம் என்று திட்டமிட்டார்கள். அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இறுதியில், ‘பூமி’ படம் தீபாவளி வெளியீட்டுத் திட்டத்திலிருந்தும் பின் வாங்கியது.

தற்போது டிஸ்னி + ஹாட் ஸ்டார் தளத்தில் படம் வெளியாவதை படத்தின் நாயகனான ‘ஜெயம் ரவி உறுதி செய்துள்ளார். இது குறித்து ‘ஜெயம்’ ரவி இன்றைக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “எனது நீண்ட திரைப் பயணம்‌ முழுக்க, முழுக்க ரசிகர்களாகிய உங்களால்‌ ஆனது. நீங்கள்‌ அளித்த அளவற்ற அன்பு.. என்‌ மேல்‌ நீங்கள்‌ வைத்த மிகப் பெரும்‌ நம்பிக்கை, நீங்கள்‌ அளித்த உத்வேகம்தான்‌, சிறப்பான படங்களில்‌ நான்‌ பணியாற்ற காரணம்‌.

எனது கடினமான காலங்களில்‌, என்னை உங்களின்‌ சொந்த ரத்தம்‌ போலவே நினைத்து எனக்கு ஆதரவளித்தீர்கள்‌. உங்களின்‌ இந்த ஆதரவே, சினிமா மீதான எனது காதலை நிலைபெற செய்தது. நீங்கள்‌ இல்லாமல்‌, என்னால்‌ இத்தனை தூரம்‌ வெற்றிகரமாக பயணித்திருக்க முடியாது. உங்களை எனது குடூம்பத்தினராகவே கருதுகிறேன்‌.

‘பூமி’ திரைப்படம்‌ எனது சினிமா பயணத்தில்‌ ஒரு மைல்‌ கல்‌. இப்படம்‌ எனது திரைப் பயணத்தில்‌ 25-வது படம்‌ என்பதையும் தாண்டி, என்‌ மனதிற்கு மிகவும்‌ நெருக்கமான படம்‌.

கோவிட்‌-19 காலத்தில்‌ ரிலீஸாகும்‌ படங்களின்‌ வரிசையில்‌ இப்படமும்‌ இணைந்திருக்கிறது. உங்களுடன்‌ இணைந்து திரையரங்கில்‌ இப்படத்தை ரசிக்க நினைத்தேன்‌, ஆனால்‌ காலம்‌ வேறொரு திட்டம்‌ வைத்திருக்கிறது. இப்படம்‌ உங்கள்‌ இல்லம்‌ தேடி உங்கள்‌ வரவேற்பறைக்கே வரவுள்ளது.

Disney + Hotstar உடன்‌ இணைந்து உங்களின்‌ 2021 பொங்கல்‌ கொண்டாட்டத்தில்‌ பங்கு கொள்வதில்‌ நான்‌ பெருமை கொள்கிறேன்‌. நிறைய பண்டிகை காலங்களில்‌ திரையரங்கில்‌ வந்து, எனது திரைப்படத்தை பார்த்து, பண்டிகையை கொண்டாடியுள்ளீர்கள்‌.

இந்த பொங்கல்‌ பண்டிகை தினத்தில்‌ எனது அழகான திரைப்படத்துடன்‌ உங்கள்‌ வீட்டில்‌ உங்களை சந்திப்பதை, ஆசிர்வாதமாகக் கருதுகிறேன்‌.

பெரும்‌ அன்புடனும்‌, நிறைய நம்பிக்கையுடனும்‌, என்‌ திரைப்படத்துடன்‌ உங்களை திரையரங்கில்‌ சந்திக்க காத்திருக்கிறேன்‌. கடவுள்‌ நம்மை ஆசிர்வதிக்கட்டும்” என்று இந்த அறிக்கையில் ‘ஜெயம்’ ரவி குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News