இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஜோசப் தலியாத்தான், தனது ‘ இரவும் பகலும்’ திரைப்படத்தில் நடிகர் ஜெய்சங்கரை அறிமுகப்படுத்தினார். இப்படம், 1965ம் ஆண்டு வெளியானது.
ஒருகட்டத்தில் அவர் பொருளாதாரத்தில் நலிந்து திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதை அறிந்த ஜெய்சங்கர், தன்னை சினிமாவில் அறிமுகம் செய்தவருக்கு உதவ வேண்டும் என முடிவெடுத்தார்.
ஜோசப் வீட்டிற்கு சென்று, ‘உங்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்ய விரும்புகிறேன்’ என்றார்.
அவரோ, ‘எனக்கு எந்த உதவியும் தேவையில்லை. நான் நன்றாகவே இருக்கிறேன். உனக்கு உதவ வேண்டுமெனில் என்னுடன் வா’ என்றவர், ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்.
ஜெய்சங்கரும் அங்கிருந்த குழந்தைகளுக்கு உதவினார். அன்று மட்டுமல்ல.. தனது வாழ்வில் நடந்த எல்லா முக்கிய நிகழ்ச்சிகளையும் அந்த கருணை இல்லத்தில்தான் நடத்தினார் ஜெய்சங்கர்.
அதுமட்டுமல்ல.. எங்கெல்லாம் படப்பிடிப்பு செல்கிறாரோ அங்கு எதாவது ‘கருணை இல்லம்’ இருக்கிறதா என விசாரித்து அங்கு சென்றும் உதவி வந்தார்.