Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“தனுஷ் கதாபாத்திரம்!”: சீக்ரட்டை ஓப்பன் செய்த எச் வினோத்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாற்பது படங்களுக்கு மேல் நடித்துள்ள  தனுஷ், இதுவரை ஏற்காத கதாபாத்திரம் ஒன்றில் புதிய படத்தில் தோன்ற இருப்பதாக இயக்குநர் எச்.வினோத் கூறயிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி  இருக்கிறது.

இவரது இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.   அதே போல தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது.

அதன் பிறகு இருவரும், புதிய படம் ஒன்றில் இணைகிறார்கள்.

அது குறித்து தற்போது வினோத் கூறியிருக்கிறார். அவர், “ அந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. காவல்துறை தொடர்பாத கதை”  என்று தெரிவித்துள்ளார்.

“ஆகவே, அப்படத்தில் தனுஷ், காவல் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்று தெரிகிறது. இதுவரை ஏற்காத வேடத்தில் அவர் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சையை ஏற்படுத்தி உள்ளது” என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News