மாமனார் ரஜினியைப் போல நடிகர் தனுஷும் போயஸ் கார்டன் வாசியாகப் போகிறார்.
போயஸ் கார்டனில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டின் அருகே புதிய வீடு கட்டுவதற்காக இடத்தை வாங்கியிருந்தார் நடிகர் தனுஷ்.
அந்த வீட்டில் புதிய வீட்டினை கட்டுவதற்கான பூஜை நிகழ்வு இன்று காலை நடந்தேறியுள்ளது.
இந்தப் பூஜை நிகழ்ச்சியில் தனுஷின் குடும்பத்தினர், மாமனார் ரஜினிகாந்த், மாமியார் லதா ரஜினி உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
தனுஷ் தற்போது ஆழ்வார்பேட்டையில் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கிறார். மிக விரைவில் இந்த வீடு கட்டப்பட்டு தனி வீட்டில் குடியேறப் போகிறார்.


