ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நாயகனாக நடித்து வெற்றி பெற்ற படம், கேப்டன் பிரபாகரன். இந்த படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவத்தை செல்வமணி கூறி இருக்கிறார்.
அவர், “தயாரிப்பாலர் ராவுத்தருக்கும் எனக்கும் அவ்வப்போது பிரச்சினை வரும்.. பிறகு சேர்ந்துவிடுவோம். அது போன்ற சூழிலில்தான் கேப்டன் பிரபாகரன் படப்படிப்பு நடந்தது.
200 குடிசைகள் கொண்ட செட் போட்டு, அது எரிவது போல காட்சி எடுக்க வேண்டும். அன்று விஜயகாந்துக்கு காட்சிகள் இல்லை.
எல்லாம் தயார்.. ஆனால் காட்சியை எடுக்க முடியவில்லை. காரணம் ஒரு கேன் பெட்ரோல் இல்லை. வாங்கி வர வேண்டியதுதானே என புரடக்சன் மேனேஜரிடம் கேட்டால் பணம் இல்லை என்கிறார்.
அந்த நேரம் விஜயகாந்த் வந்துவிட்டார். ஆத்திரமான அவர், தானே பணம் கொடுத்து பெட்ரோல் வாங்கிவரச் சொன்னார். அதன் பிறகு படப்பிடிப்பு நடந்தது” என நினைவலைளை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் ஆர்.கே.செல்வமணி.