Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

நெகிழ வைத்த ரஜினி!: நடிகர் பாரதி மணி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பூர்ணம் விசுவநாதன், கே.பாலசந்தர்,  சோ என பலருடைய நாடகங்களில் நடித்தவர் பாரதி மணி. ள்ளார். 2000 முறைக்கு மேல் மேடையேறிய அனுபவம் உள்ளவர். பாரதி படத்தில் பாரதியின் தந்தையாக நடித்தில் இருந்து பாரதி மணி என அழைக்கப்பட்டார்.

பாபா படத்தில் முதலமைச்சராக நடித்தார்.

அப்போது நடந்த அனுபவத்தை ஏற்கெனவே மணி பகிர்ந்துகொண்டார். அது..

“மைசூரில், முதல் இரண்டு நாள் ஷூட்டிங். பின் மூன்று நாள் எனக்கு ஷூட்டிங் இல்லை.  அதன் பிறகுதான் நான் நடிக்க வேண்டிய காட்சி. ஆகவே  நிறையப் புத்தகங்களைக் கொண்டு போய்ப் படித்துக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கும். அறை மணி அடித்தது. யார் என்று திறந்து பார்த்தால் ரஜினி. “ஐயா… எல்லாம் வசதியாக இருக்கிறதா?” என்கிறார் தனக்கே உரிய புன்சிரிப்புடன். “இதைக் கேட்க நீங்களே வரவேண்டுமா? அதான் ஆட்கள் இருக்கிறார்களே” என்றேன். “அதில்லைங்க ஐயா. உங்களுக்கு மூணு நாள் ஷூட்டிங் இல்லை. வெள்ளிக்கிழமைதான் ஷூட்டிங். க்ளைமாக்ஸ் எடுக்கிறோம். 5000 ஜூனியர் ஆர்டிஸ்டும் நடிக்கிறாங்க. அதான் அதை நேர்ல உங்களுக்குச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். ஒண்ணும் வசதிக் குறைச்சல் இல்லையே?” என்றார்.

அவரது பணிவு அன்பு நெகிழவைத்தது” என கூறியிருக்கிறார் மணி.

- Advertisement -

Read more

Local News