Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

பா.ஜ.க.வில் சேரும் அடுத்த சினிமா பிரபலம் நடிகர் அர்ஜூனா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பா.ஜ.க.வில் சேரும் பிரபலங்களின் பட்டியல் உயர்ந்து கொண்டே போகிறது. கோடம்பாக்கத்தில் பல முக்கிய பிரபலங்களை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

நடிகைகள் குஷ்பூ, கவுதமி, காயத்ரி ரகுராம், நமீதா, ஜெயலட்சுமி, மதுவந்தி என்ற வரிசையில் அடுத்து நடிகர் அர்ஜூனும் இடம் பெறப் போவது உறுதி என்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நடிகர் அர்ஜூன் இயல்பிலேயே தேசியக் கொள்கை உடையவர். ‘இந்தியன்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாக படத்துக்குப் படம் சொல்லிக் கொண்டவர். இதனால் ஒரு தேசியக் கட்சியில், அதுவும் பா.ஜ.க.வில் அவர் சேர்வதில் ஆச்சரியமில்லைதான்.

பா.ஜ.க.வின் அடுத்த விக்கெட் நடிகை கஸ்தூரியாக இருக்கலாம். கஸ்தூரியோ, “இந்த நிமிடம்வரையிலும் தனக்கு பா.ஜ.க.வில் சேரும் திட்டமே இல்லை” என்கிறார். ஆனால், “என்னை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்யான பிரச்சாரங்களைப் பார்த்தால் பேசாமல் பா.ஜ.க.வில் சேர்ந்தேவிடலாமோ என்று எண்ணுவதாக” சொல்லியிருக்கிறார் கஸ்தூரி.

ஆக, அடுத்து கஸ்தூரி கமலாலயத்தில் கால் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.

எப்படியோ அடுத்த சட்டமன்றத் தேர்தலின்போது ஒவ்வொரு கட்சியில் வழக்கமான அரசியல்வாதிகளுக்கு இடையேயான மோதலைவிடவும் சினிமா கலைஞர்களின் மோதலே பெரிதாக இருக்கும் போல தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News