Friday, April 12, 2024

“வலிமை வரும். பொறுமையா இருங்க…” – நடிகர் அஜீத்குமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தனது ரசிகர்களை பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் அஜீத்குமாரின் ரசிகர்கள் அவரை ‘தல’ என்று பாசத்துடன் அழைப்பதோடு, அவருடைய படங்களின் மீது தீராத காதல் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களில் சிலர் வெறி பிடித்த ரசிகர்களாக இருப்பதால் அவர்களால் அஜீத்திற்கு பல பிரச்சினைகள் வந்தன. இதையொட்டித்தான் தனது ரசிகர் மன்றங்களை ஒரே நாளில் கலைத்தார் அஜீத்.

ஆனாலும், இப்போதும் சமூக வலைத்தளங்களில் அஜீத் மீது யாராவது ஒருவர் தவறு சொன்னால்கூட வறுத்து எடுத்து விடுவார்கள் அஜீத்தின் ரசிகர்கள்.

தற்போது அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படம் பற்றிய தகவல்கள் எதுவும் சமீப நாட்களில் வெளியாகவில்லை. படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் பாலிவுட்காரர். பெரும்பாலும் மும்பையில் குடியிருப்பதால் இங்கே என்ன நடக்கிறது என்று அவருக்கும் தெரிவதில்லை. ஆனால் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அவ்வப்போது படத்தின் புகைப்படங்கள் வெளியானால்தான் அஜீத்தை பார்க்க முடியும் என்கிற ஆதங்கத்தில் அவரது ரசிகர்கள் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், அந்த அப்டேட்டை கொடுக்கத்தான் ஆளில்லை.

இதனால் பொறுமையிழந்த அவரது ரசிகர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தபோது “வலிமை’ அப்டேட் எப்போ ஸார் வரும்..?” என்று அவர் காதில் விழுகும் அளவுக்குக் கத்திவிட்டார்கள்.

பின்பு பல அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இடையில் புகுந்து ‘வலிமை’ படத்தின் அப்டேட் பற்றிச் சங்கடத்தை ஏற்படுத்துகிறார்கள். கடைசியாக பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் பக்கத்திற்கே டேக் செய்து ‘வலிமை’ அப்டேட் பற்றிக் கேட்டுவிட்டார்கள்.

போதாக்குறைக்கு சென்னையில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான போட்டியின் நடுவே “வலிமை’ படத்தின் அப்டேட் என்ன…?” என்று கேட்டு போஸ்டர்களைக் காட்டி போட்டியைப் பார்க்க வந்த கிரிக்கெட் ரசிகர்களையே எரிச்சலாக்கிவிட்டார்கள்.

இதனால் கடும் அதிருப்தியடைந்த அஜீத்குமார் இது பற்றி தனது ரசிகர்களுக்கு புத்தி சொல்லி ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இதுதான் :

- Advertisement -

Read more

Local News