Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் எல்லோருக்கும் உதவக்கூடியவர் கேப்டன் விஜயகாந்த் என்பது தெரிந்த விஷயம்.  பிரதிபலன் எதிர்பாராமல் உதவி என்றால் தயங்காமல் செய்யக்கூடியவர். ஆனால் இவரைப் பற்றி யாரும் அறியாத ஆச்சரியமான சம்பவம் பற்றி பார்க்கலாம்.

விஜயகாந்த் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “சொல்வதெல்லாம் உண்மை”. நேதாஜி இயக்கத்தில் டி.சிவா தயாரித்திருந்தார்.இவர் இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு வருடத்திற்கு முன்பே விஜயகாந்திடம் சம்பளம் 3 லட்சம் பேசியிருந்தார் சிவா.

அதற்குள் விஜயகாந்த் நடித்து வெளிவந்த “கரிமேடு கருவாயன்” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு அவரது சம்பளம் 3னில் இருந்து 4 ½ லட்சமாக உயர்ந்தது. இந்த விஷயத்தை விஜயகாந்த் நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் டி.சிவாவிடம் கூறிவிட்டாராம்.

ராவுத்தர் பேசியது பற்றி சிவாவிடம் விஜயகாந்த், கேட்டுள்ளார் அதற்கு ஆமாம் என கூறியுள்ளார். கவலைப்பட வேண்டாம் எதுவானாலும் நான் பார்த்து கொள்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

“சொல்வதெல்லாம் உண்மை” திரைப்படம் வெளிவந்தது ஆனால் எதிர்பார்த்த வெற்றி கொடுக்கவில்லை படம் படுதோல்வியடைந்தது. அதை ஈடுகட்டும் விதமாக அடுத்த ஆண்டு 1988 ஆம் ஆண்டு “பூந்தோட்ட காவல்காரன்” மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. இந்த படத்தின் லாபத்தில் 20% பங்கை

- Advertisement -

Read more

Local News